Categories
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 11 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை – ஆட்சியர் அறிவிப்பு!

கிருஷ்ணகிரியில் பெண் மருத்துவர் உட்பட 11 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என ஆட்சியர் அறிவித்துள்ளார். விழுப்புரத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த மருத்துவருக்கு கொரோனா இருந்த நிலையில் அவரது மனைவி உட்பட 11 பேருக்கு கொரோனா பரிசோதனை இன்று நடைபெற்றது. அதில் கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்ந்து கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 2,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 922 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1,210 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையிலும், கணிசமாக கொரோனா பாதிப்பில் இருந்து குண்டமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனிடையே கரூர் மற்றும் ஈரோட்டில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அனைவரும் வீடு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டம் கொரோனா இல்லாதா மாவட்டங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |