Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பயத்திற்கு NO : முன்னெச்சரிக்கைக்கு YES சொல்லுங்கள் – மோடி ட்வீட் …!!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் நாளுக்கு நாள் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 73 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் மட்டும் 17 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதிசெய்யப்ட்டது. இந்திய அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு பல்வேறு அறிபுறுத்தலையும் வழங்கி வருகின்றது.

இது குறித்து பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் கொரோனா குறித்த பயத்திற்கு NO சொல்லுங்கள் , முன்னெச்சரிக்கைக்கு YES சொல்லுங்கள்.பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். பெருமளவில் ஓன்று கூடுவதை தவிர்த்தாலே கொரோனா பரவுவதை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என ட்வீட் செய்துள்ளது.

Categories

Tech |