இம்ரான்கானை வரவேற்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் யாருமே வரவில்லை என்று பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் அதிபர் அதிபர் டொனால்டு டிரம்பை நாளை சந்தித்துப் பேசுவதற்கு இம்ரான்கான் 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். இம்ரான் கான் தனிப்பட்ட விமானத்தில் செல்லாமல் சிக்கன நடவடிக்கையாக பயணிகள் விமானத்தில் சென்று டல்லாஸ் விமான நிலையத்தில் இறங்கினார். ஆனால் இம்ரான்கானை வரவேற்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் யாருமே வரவில்லை.
பாக். வெளியுறவு அமைச்சர் குரேஷி, மற்றும் அமெரிக்காவுக்கான பாக். தூதர் ஆசாத் எம் கான் ஆகியோர் மட்டுமே வரவேற்றதாகவும், அவர் சாதாரணமாக மக்களுடன் சேர்ந்தே விமான நிலையத்தை விட்டு வெளியேறியதாகவும், கூறி பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.
இது இணையதளங்களில் வைரலாகி நகைப்புக்குள்ளாகியுள்ளது. இந்த வீடியோவிற்கு பலரும் பலவிதமாக கிண்டலடித்து வருகின்றனர். பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடவில்லை என்பதற்காக இவ்வளவு பெரிய தண்டனை கூடாது என டிவிட்டரில் ஒருவர் கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார். ஆனால் சிலர் இம்ரான்கான் சாதாரணமாக பயணிகள் விமானத்தில் அமெரிக்கா சென்றதை பாராட்டியும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.