அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, இந்த மாணவ செல்வங்கள் நாம் பெற்றெடுத்த குழந்தைகள். இந்த அரசாங்கத்தை நம்பி பள்ளிக்கு அனுப்புகின்றோம், கல்லூரிக்கு அனுப்புகின்றோம், ஆகவே பாதுகாக்க வேண்டியது இந்த அரசினுடைய கடமை.
ஆகவே இங்கே வருகை தந்திருக்கும் நம்முடைய தாய்மார்களும், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பெரியவர்களும் நம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்ற போது நீங்கள் கண்காணிக்க வேண்டும். நம்முடைய குழந்தைகள் சரியாக பள்ளிக்கு போகிறார்களா ? பள்ளியில் இருந்து வீடு திரும்புகிறார்களா ? இடையில் வேறு ஏதாவது இருக்கிறதா ? என்று கண்காணிக்க வேண்டும்.
இந்த அரசை நம்பி பிரயோஜனம் இல்லை, நாம் ஈன்றெடுத்த செல்வங்கள், நம் கண் முன்னே கெடுவதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது, ஆகவே இந்த அரசாங்கத்தை நம்பி பிரயோஜனம் இல்லை. இனி ஒவ்வொருவரும் நம் ஈன்றெடுத்த குழந்தைகள் பள்ளிக்கு சென்று இருக்கின்ற போது, கல்லூரிக்கு செல்கின்ற போது, கண்காணிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கின்றது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
ஏனென்றால் நானும் பிள்ளைகளை பெற்றெடுத்தவன், எனக்கும் குழந்தைகள் இருக்கிறது. நம்முடைய குழந்தைகள் கஷ்டப்படுவதை கண் முன் பார்த்து சகிக்க முடியாது. ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் அதைப்பற்றி கவலையே கிடையாது, நாட்டுக்கா முதலமைச்சர்? அவர் வீட்டுக்கு தானே முதலமைச்சர். நாட்டிற்கு முதலமைச்சராக இருந்தால் நாட்டு மக்களை பற்றி சிந்திப்பார், நாட்டில் உள்ள குழந்தைகளை பற்றி சிந்திப்பார், சிந்திக்க தெரியாத முதலமைச்சர் என தெரிவித்தார்.