Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எந்த வண்டிலயும் போக முடியல… திடீரென ஏற்பட்ட சரிவு… நேரில் ஆய்வு செய்த எம்.எல்.ஏ….!!

நாமக்கல் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கொல்லிமலை கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலை மிகவும் அழகிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் சில தினங்களாக பெய்து வரும் கன மழை காரணமாக கொல்லிமலைக்கு செல்லும் கொண்டை ஊசி வளைவுகளில் இருக்கும் சிறிய பாறைகள் சாலைகளில் உருண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு காற்றுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் மலையில் உள்ள 32வது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராதவிதமாக மண்சரிவு ஏற்பட்டு அதற்கு கீழே உள்ள வளைவுகளிலும் மண் சரிந்து விழுந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த எம்.எல்.ஏ பொன்னுசாமி அவர்கள் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் குமரேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து குமரேசனின் உத்தரவின்படி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைனின் உதவியுடன் சாலையில் சரிந்து விழுந்த மண்ணை அகற்றியுள்ளனர். இதற்குப்பின் அப்பகுதியில் போக்குவரத்து வழக்கம்போல இயங்கியுள்ளது.

Categories

Tech |