மதுரை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கி உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பயணிகள் கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு சென்று https://tnepass.tnega.org – பதிவு செய்து இ-பாஸ் பெறலாம். விமான நிலையத்தில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். நோய் அறிகுறி இல்லாமல் இருந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனை ஏதும் இல்லை என்பது குறித்தும் உறுதி மொழி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள்ளது. இந்த நிலையில் 61 நாட்களுக்கு பிறகு மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, டெல்லி, பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு 12 விமான சேவைகள் தொடங்கின.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள பல்வேறு விதிமுறைகளால் பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதனால் மதுரை, சென்னை இடையிலான இரண்டு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளது. மேலும் டெல்லி, பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு செல்லக்கூடிய விமானங்கள் என அறிவிக்கப்பட்ட 12 விமானங்களில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பில் மதுரை, சென்னை இடையே இரண்டு விமானங்கள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகின்னர்.