Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணிக்கே பண பற்றாக்குறையா..? அரண்மனை வட்டாரம் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின், வருமானம் கடந்த 2019-2020 ஆம் வருடத்தில், 20.2 மில்லியன் பவுண்டுகள் இருந்திருக்கிறது. தற்போது 2020-2021 ஆம் வருடத்தில் 9.4 மில்லியன் பவுண்டுகள் தான் வருமானம் கிடைத்துள்ளது. இந்த பணப்பற்றாக்குறை ஏற்பட  கொரோனா பாதிப்பு தான் காரணமாக கூறப்படுகிறது.

அதாவது கொரோனா அச்சத்தால், அரண்மனையைக்காண சுற்றுலா பயணிகள் அவ்வளவாக  வருவதில்லை. எனவே பொதுமக்கள் மட்டும் கொரோனாவால் வருவாய் இழக்கவில்லை மகாராணியும் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 மில்லியன் பவுண்டுகள் வருமானம் குறைந்துவிட்டதால், சேமிப்பில் வைத்திருந்த பணத்தை செலவிற்காக எடுக்க வேண்டிய நிலை அரச குடும்பத்தின் அரண்மனைக்கு ஏற்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |