இந்தியாவைப் போல் ஒரு ஜனநாயக நாடு தேர்தலை சந்தித்து கொண்டு இருந்தது அப்போது தேர்தல் கொண்டாட்டத்தை நாடே கொண்டாடி வந்தது நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் கட்சித் தலைவர்கள் நாடு முழுவதும் மாபெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு மக்களை சந்தித்து வந்தனர் ஒரு சில அரசியல்வாதிகள் நேரடியாக போட்டியிடாமல் மறைமுகமாக பணத்தை வைத்து வெற்றி பெற நினைத்தனர் ஒவ்வொரு ஒட்டியிருக்கும் ரூபாய் 1000 நிர்ணயித்து கொடுத்து வந்தார்
இதனையடுத்து அந்த அரசியல்வாதி தொடர்ந்து மக்களை சந்தித்து பணம் கொடுத்து வந்த நிலையில் முதியவர் ஒருவரை சந்தித்து ஐயா வணக்கம் எனக்கு நீங்கள் வாக்களிப்பேன் என்று உறுதி அளித்தால் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்றார் இதற்கு அந்த முதியவர் எனக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வேண்டாம் அதற்கு பதிலாக கழுதை ஒன்றை எனக்கு வாங்கித் தாருங்கள் என்று அரசியல்வாதியிடம் அவர் கேட்டார்
இதனை அடுத்து அரசியல்வாதி கழுதை வாங்குவதற்கு நாடலாம் சுற்றித் திரிந்தார் எங்கு சென்றாலும் ஒரு கழுதையின் விலை 10 ஆயிரம் அல்லது அதற்கு மேல் தான் உள்ளது 10 ஆயிரத்திற்கு கீழ் எந்த ஊரிலும் நாட்டின் எந்த பகுதியிலும் கழுதை கிடைக்கவில்லை அதன் பின் மீண்டும் அந்த முதியவரை சந்தித்த அந்த அரசியல்வாதி ஐயா 10,000 ரூபாய்க்கு கீழ் எங்குமே கழுதை கிடைக்கவே இல்லை என்றார்
அப்போது அந்த முதியவர் சொன்னார் ஒரு கழுதையின் விலையே பத்தாயிரம் இருக்கும் பொழுது எனக்கு நீங்கள் ஆயிரம் ரூபாய் மட்டுமே தருகிறீர்கள் ஆகையால் உங்கள் பார்வைக்கு முன் மக்களாகிய நாங்கள் கழுதையை விட ஏளனமாக பார்க்கப்படுகிறோம் கேவலமாக பார்க்கப்படுகிறோம் ஆகையால் எனது வாக்கினை நான் விற்க மாட்டேன் என்று அந்த அரசியல்வாதியிடம் தைரியமாக கூறிவிட்டு சென்று விட்டார்
தற்பொழுது இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஆனதே அறிவிக்கப்பட்டுவிட்டது இதனையடுத்து 100 சதவீத வாக்கினை நேர்மையான முறையில் வாக்கினை விற்காமல் செலுத்த உறுதி ஏற்போம் சிந்திப்போம் செயல்படுவோம்