தொழில்நுட்ப கோளாறினால் 4 ரயில்கள் 20 மணி நேரம் ஒரே இடத்தில் நின்று அதற்கு மக்களிடம் நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது
ஹென்டே நகரில் இருந்து பாரிஸ் நோக்கி புறப்பட்ட 4 ரயில்கள் திடீர் தொழில்நுட்ப கோளாறினால் போகும் வழியிலேயே நின்றுவிட்டது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உண்ண உணவு குடிக்கத் தண்ணீர் இன்றி சுவாசிக்க காற்று கூட இல்லாமல் அவதிப்பட்டு உள்ளனர். அதோடு ரயில் போக்குவரத்து பொதுப்போக்குவரத்து என்பதால் முக கவசத்துடன் பெரும் பாடுபட்டனர். முதலில் பயணிகளுக்கு தண்ணீரும் உணவும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிறகு அதை வழங்க முடியாது என்பது சூழலை மிகவும் மோசமாக்கியுள்ளது.
இறுதியாக 20 மணி நேரத்திற்குப் பிறகு ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பேருந்து மூலம் பாரிஸுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ரயிலுக்கு மின்சாரத்தை வினியோகிக்கும் கேபிளில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அது குறித்த விசாரணைக்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இதனிடையே பயணிகள் சிரமத்திற்கு நஷ்ட ஈடு வழங்கும் விதமாக பயணச்சீட்டுக்கான கட்டணத்தை மூன்று மடங்காக திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.