Categories
தேசிய செய்திகள்

“எனக்கு நோபல் பரிசு வேண்டும்” பாலத்தின் மீது நின்று அடாவடி செய்த பெண்…!!

பாலத்தின் மீது ஏறி நோபல் பரிசு கொடுத்தால் தான் கீழே இறங்குவேன் என பெண் ஆர்ப்பாட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

மேற்கு வங்காளம் கொல்கத்தாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் ஹவுரா பாலத்தின் மீது ஏறி நின்றார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் அந்த பெண் பாலத்தின் மீது ஏறி நிற்பதை கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் தெரிந்து அங்கு வந்த ஹவுரா காவல்துறையினர், தீயணைப்பு  சிறப்பு குழு வீரர்களுடன் இணைந்து அப்பெண்ணை கீழே இறக்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால், தனக்கு அமர்த்தியா சென் பிரிவில் தனக்கு நோபல் பரிசு கொடுத்தால் தான் கீழே இறங்குவேன், இல்லாவிட்டால் கீழே இறங்க மாட்டேன் என அந்த பெண் அடம் பிடித்துள்ளார். சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு, அவரை காவல்துறையினர் தொடர்ந்து சமாதானப்படுத்திய பிறகே அவர் இறுதியாக கீழே இறங்க சம்மதம் தெரிவித்தார்.

Categories

Tech |