2019ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
ஆண்டுதோறும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடு குறித்தும் பரிசீலித்த பின் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து இந்த பரிசை அறிவித்து வருகின்றனர்.
அதன்படி 2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு சர்வதேச அளவில் வறுமையை ஒழிக்கும் திட்டங்களை வகுத்ததற்காக அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அபிஜித் பானர்ஜி இந்தியாவில் பிறந்து, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயின்றவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றார். அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ இருவரும் கணவர்- மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.