சென்னையில் நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாளை முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனால் சென்னை முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுடைய கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும், காய்கறிகளை வாங்குவதற்காகவும் முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தன. அதே போல வாகன போக்குவரத்தும் முக்கிய சாலைகளில் அதிக அளவில் காணப்படுகிறது.
இதனால் 1 மணி வரை மட்டுமே அத்தியவசிய பொருட்கள் வாங்குவதற்கான அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டு இருந்த நிலையில் இன்று மட்டும் மூன்று மணிவரை அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பதாக குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக கடைகள் ஒரு மணி வரையே திறந்திருக்கும் என்று மாநில அரசு அறிவித்து இருந்த நிலையில் தற்போது 3 மணி வரை கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.