சென்னையில் இன்று ஒரு நாளில் 32 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது மக்களுக்கு சற்று ஆறுதலை அளிக்கிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் இறப்பு வீதம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது, நிம்மதியை ஏற்படுத்துகின்றது. இன்னும் ஐந்து நாட்களில் ஊரடங்கு நிறைவுபெற இருக்கும் இந்த சூழலில்கொரோனா பரவும் வேகம் யாரும் எதிர்பார்க்காத நிலையில் இருந்து வருகிறது.
இதில் அதிகமான அளவில் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக வந்தது என்னவென்றால் சென்னையில் இன்று ஒரே நாளில் 12 வயதுக்குட்பட்ட 32 குழந்தைகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இது அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் நாளுக்கு நாள் அதிகமான குழைந்தைகள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.