அதிமுகவில் உள்ள அனைத்து உள்ளாட்சி கழக செயலாளர் பொறுப்பும் இரத்து செய்யப்படுகின்றது என்று அதிமுக அறிவித்துள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக தற்போது அதன் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய அமைப்புகளுக்கு கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ஊராட்சி கழகச் செயலாளர்கள் பொறுப்பும் இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது.
ஊராட்சி கழகச் செயலாளர்களாக பணியாற்றி வந்த அனைவருக்கும் விரைவில் மாற்றுப் பொறுப்புகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதன் காரணமாக அதை சரி செய்யும் வகையில் இந்த பொறுப்புகள் ரத்து செய்யப்படுவதாக தகவல் கிடைக்கிறது. இருந்தபோதிலும் இந்த பொறுப்புகளில் இருந்தவர் பல ஆயிரம் பேருக்கு மேல் இருப்பார்கள்.