நொச்சி இலையின் மருத்துவ குணம் குறித்து இந்து செய்தி தொகுப்பில் காண்போம்.
நொச்சி இலை என்ற நிலையை நாம் கேள்விப் பட்டிருக்க மாட்டோம். கிராமப்புறத்தில் இருப்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே இந்த இலை குறித்த மருத்துவ குணத்தை அறிந்திருப்பர். மூட்டுவலி உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து இந்த நொச்சி இலை.
இந்த இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் மூட்டுவலி குணமடையும். சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாற்றை மேல் பூச்சாக பயன்படுத்தலாம். நொச்சி இலையால் தயாரிக்கப்படும் தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது.