இந்தியாவில் கொரோனா 2 வது அலை மிக வேகமாக பரவுவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்றின் 2 வது அலை மிக வேகமெடுத்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் தான் அதிக மக்கள் மீண்டும் பாதிப்படைந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் நகரங்களில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் மக்களிடையே கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது கொரோனா சிகிச்சை பணியில் மாநில அரசுகளுக்கு ராணுவம் உதவ வேண்டும் என்று கூறினார்.
மேலும் கொரோனா சிகிச்சைக்காக உள்ளூர் நிர்வாகத்திற்கு ராணுவம் மற்றும் டி.ஆர்.டி.ஓ. போன்ற அமைப்புகள் அவர்களிடம் உள்ள நிபுணர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், கூடுதல் படுக்கை வசதிகள் ஆகியவைகளை போர்க்கால அடிப்படையில் உதவி வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ராணுவ கமாண்டர்கள் அந்தந்த மாநில முதல்வர்களை சந்தித்து வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.