Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மீன் எண்ணெய் மாத்திரை …!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் மீன் எண்ணெய்யினால் ஏற்படும் நன்மைகள்…!

உடலுக்கு தேவையான அதேவேளையில் இயற்கையாக எளிதில் கிடைக்காத பலவகை சத்துக்கள் சுறா, திமிங்கலம் போன்ற மிகப்பெரிய மீன் வகைகளில் கிடைக்கிறது.

இவற்றின் கல்லீரலில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுத்து பல கட்ட சுத்திகரிப்பிற்கு பிறகு சிறிய உருண்டை வடிவ குழாய்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது அதுதான் மீன் எண்ணெய் மாத்திரை.

இந்த மீன் எண்ணெயில் அதிக அளவு விட்டமின் “ஏ”, விட்டமின் “டி”, ஒமேகா-3, ஃபேட்டி ஆசிட் மற்றும் டி.ஹெச்.ஏ உள்ளது.

இதில் உள்ள விட்டமின் டி குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையவும் உதவுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் தரக்கூடியது.

 

 

இதில் டி.ஹெச்.ஏ இருப்பதால் மூட்டு வீக்கத்தையும்,வலியையும் எளிதாக குறைக்கும்.

நம் உடலில் இருக்கும் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மீன் எண்ணெயில் இருக்கும் ஒமேகா-3 இந்த டிரைகிளிசரைடு குறைத்து விடும். இதனால் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்து விட முடியும்.

உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தக்கூடியது. எப்பொழுதும் டென்ஷன் மன அழுத்தம் என படபடப்பாக இருப்பவர்களையும் இந்த மீன் எண்ணெயில் உள்ள சத்துக்கள் அமைதிப்படுத்தும் தன்மை கொண்டவை.

மனநிலை பாதிப்பு மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினை கொண்டவர்களுக்கு மீன் எண்ணெயில் உள்ள சத்துகள் பக்க விளைவுகள் இல்லாமல் நிவாரணம் தரக்கூடியது.

 

இந்த எண்ணெயில் ஒமேகா-3 புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.

மீன் எண்ணெய் மாத்திரைகள் உள்ள சத்துகள் குழந்தைகளுக்கு வரும் பார்வை குறைபாடு போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

தினமும் மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டு வந்தால் சருமம் நன்கு மென்மையாகவும், கூந்தல் நன்றாக வளரும்.

மீன் எண்ணெய் மாத்திரை ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ். இதனால் சரும செல்களின் சேதாரத்தை கட்டுப்படுத்தி சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பளபளப்புடன் இருக்க செய்கிறது.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால் சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது,ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கக் கூடியது. ரத்த அழுத்தத்தை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள், இதய நோய்க்கு ஏற்கனவே மருந்து எடுத்துக் கொண்டு வருபவர்கள் ஆகியோர் அவசியம் மருத்துவரின் பரிந்துரைப்படி மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதே போன்று அதிக அளவில் விட்டமின் ஏ இருப்பதால் தொடர்ந்து உட்கொள்ள கூடாது.

கொஞ்சம் இடைவெளிவிட்டு சாப்பிடுவது நல்லது. இந்த மாத்திரையை 20 வயதிலிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் தினமும் ஒரு மாத்திரை எடுத்துக் கொண்டாலே போதும்.

45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு விட்டமின்களை விட கால்சியம், மக்னீசியம், துத்தநாகம் போன்ற தாது சத்துக்கள் வேண்டும். எனவே  இவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

Categories

Tech |