Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆஸ்காருக்கு” தேர்வான “சூரரைப் போற்று”…! சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்…!

சூர்யா நடிப்பில் வெளியான “சூரரைப்போற்று” திரைப்படம் ஆஸ்கார் நாமினேஷனுக்கு  தேர்வாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “சூரரைப்போற்று” திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவையும் பாராட்டையும் பெற்றது. இத்திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஊர்வசி, கருணாஸ் ஆகியோரும் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இந்நிலையில் ஆஸ்கார் நாமினேஷனுக்கு தேர்வான 366 படங்களில் “சூரரைப்போற்று” படமும் இடம்பெற்றுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

Categories

Tech |