Categories
உலக செய்திகள்

உயிரிழப்பே இல்லாத நாள் இதுதான்..! கொரோனாவால் திணறும் பிரபல நாடு… வெளியான ஆச்சரிய தகவல்..!!

ஜப்பானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 15 மாதங்களில் முதன் முதலாக கொரோனா உயிரிழப்பு இல்லாத தினமாக அமைந்துள்ளது.

ஜப்பானில் டெல்டா வகை தொற்று பாதிப்பு கடந்த கோடை மாதத்தில் தினந்தோறும் 25 ஆயிரம் பேருக்கு உறுதி செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் பரவலான முக கவசம் பயன்பாடு, தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் ஆகியவற்றின் காரணமாக கடந்த செப்டம்பரிலிருந்து நோய்த்தொற்று படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. மேலும் ஜப்பான் நாட்டில் சுமார் 18 ஆயிரத்து 310 பேர் கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொரோனாவால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை 15 மாதங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லாத தினமாக அமைந்துள்ளது. இதற்கிடையே சுகாதார அமைச்சகம் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதியும் உயிரிழப்பு பதிவாகாத தினமாக இருந்ததாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |