Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

5 நிமிசத்துல…குக்கரில் கறிக்குழம்பு…அதுவும் இவ்ளோ ஈஸியா…!!

கறி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

கறி                               – அரைக்கிலோ                                                                                                                                வத்தல்                        -5
வெங்காயம்            – 50 கிராம்
சீரகம்                          – ஒரு மேசைக்கரண்டி
நல்லெண்ணெய்   – 5 கரண்டி
கொத்தமல்லி         – ஒரு மேசைக்கரண்டி
உப்பு                            – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள்            – தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் மிக்ஸி ஜாரில் வெங்காயம்  50 கிராம், வத்தல் 5, சீரகம்  ஒரு மேஜைக்கரண்டி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், அரைத்து வைத்திருக்கும் மசாலா, கறி, தேவையான உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி நன்றாக வேக வைத்து இறக்கவும்.

குக்கர் விசில் அமைந்ததும் திறந்தால் அதில் குழம்பு என்னை தெளிந்து கெட்டியாக புரட்டினார் போல் வந்ததும் பரிமாறலாம், இப்போது சுவையான கறிக்குழம்பு தயார்.

குறிப்பு:

பிரியப்பட்டால் தேங்காய் கால் மூடி பாலெடுத்து கறியை வேக வைக்கும்போது ஊற்றி வேக வைக்கவும்
.

Categories

Tech |