பொதுமக்கள் ஹோட்டல்களில் சமூக இடைவெளியை பின்பற்றி அசைவ உணவுகளை வாங்கி செல்கின்றனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வாகனங்கள் மூலம் மக்களுக்கு காய்கறிகளை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இறைச்சி கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனால் தற்போது பொதுமக்கள் அசைவ உணவுகளை ஹோட்டல்களில் பார்சல் கட்டி வாங்கி செல்கின்றனர். மேலும் சிலர் அசைவ உணவுகளை ஸ்விகி, சொமாட்டோ போன்றவற்றின் மூலம் ஆர்டர் செய்து வாங்கி சாப்பிடுகின்றனர். அதன் பின் ஹோட்டல்களில் அதிகம் கூடுகின்ற மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சிக்கன் பிரியாணி போன்ற அசைவ உணவுகளை விரும்பி வாங்கி செல்கின்றனர்.