Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் கரெக்டா பண்ணுறோம்… ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி… கட்டுப்பாடுகளுடன் சிறப்பு பிரார்த்தனை…!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிவாசல்களில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முஸ்லிம்களின் புனித ரமலான் நோன்பு தொடங்கியதை முன்னிட்டு முதலாவது நாள் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி வழக்கமாக அங்குள்ள பள்ளிவாசலில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு பள்ளிவாசல்களில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியானது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாறாக அவரவர் வீடுகளில் நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உப்பிலிபாளையம் பள்ளிவாசல் போன்ற பல்வேறு பள்ளிவாசல்களில் அனைவரும் நோன்பு கஞ்சியை வாங்கிவிட்டு வீடுகளுக்கு சென்று நோன்பு திறந்துள்ளனர். மேலும் புனித ரமலானை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு பிரார்த்தனை சமூக இடைவெளி கடைபிடித்தபடி 10 மணி வரை நடை பெற்றுள்ளது. இந்நிலையில் சமூக இடைவெளியை கடை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், பள்ளிவாசலுக்குள் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவதாகவும் கோவை ஹிலால் கமிட்டி செயலாளர் நாசர் தீன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |