அமமுக_வில் இருந்து வெளியேறியவர்கள் யாரும் தளபதிகள் அல்ல வெறும் நிர்வாகிகள் தான் என்று TTV தினகரன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் தோல்வியையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்த கட்சி நிர்வாகிகள் அதிமுக மற்றும் திமுக_வில் இணைந்து வருகின்றனர். அக்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த தங்க தமிழ் செல்வன் TTV_யுடன் ஏற்பட்ட மோதலில் திமுக_வில் இணைந்தார். அதை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த இசக்கி சுப்பையா தாம் அதிமுகவில் இணைய போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா_வை சந்தித்த TTV தினகரன் முக்கிய ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , அதிமுகவிற்கு போக முடிவு எடுத்த பிறகு தான் அமமுகவில் இருந்து இசக்கி சுப்பையா விலகி உள்ளார். அமமுகவில் இருந்து விலக முடிவு எடுத்த பின்பு என்னை குறை சொல்கின்றனர். அமமுகவில் இருந்து சென்றவர்கள் எல்லாம் தளபதிகள் இல்லை. அவர்கள் நிர்வாகிகள் தான் என்று தெரிவித்தார்.