நான் ஸ்டிக் தவா நீண்டகாலம் உழைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் பார்ப்போம்.
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் நீண்ட காலம் உழைத்தால் அது நமக்கு லாபம் தரும். பொதுவாக நான்ஸ்டிக் தவாவில் மேற்பரப்பில் எந்த பொருளும் ஒட்டிக் கொள்ளாத வண்ணம் பாலிடெட்ராஃப்ளூரோஎத்திலீன் என்ற பொருள் பூசப்பட்டிருக்கும். அலுமினியம், சிலிகா எனாமல் பூசப்பட்ட வார்ப்பு இரும்பு போன்ற நான்ஸ்டிக் தவாவில் உள்ளது. நான் ஸ்டிக் தவாவில் எண்ணைய் தேவை கிடையாது. குறைந்த அளவு எண்ணெயை பயன்படுத்தினால் போதும் ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நான்ஸ்டிக் தவாவை மாற்றிக்கொள்ளவேண்டும்.
இப்படி நான் நீண்ட காலம் நீடிக்க சில உதவிக் குறிப்புகள் உள்ளது. பொதுவாக நாம் சமைப்பதற்கு முன்பு சமையல் எண்ணையை இடுவோம். ஆனால் இப்படி சமைப்பது உடல் நலத்திற்கு கேடு. என்னையே ஊற்றுவதற்கு பதிலாக, வெண்ணையை பரப்புவதற்கு பதிலாக, எண்ணெய்யில் நனைத்த காகிதத் துண்டை பயன்படுத்துங்கள். இதை நான்ஸ்டிக்கை சுற்றி துடையுங்கள். உலோகத்தாலான கத்தி, கரண்டி போன்றவற்றை நான்ஸ்டிக் பயன்படுத்துவதை தவிருங்கள். தோசை கரண்டி அல்லது மற்ற கரண்டிகளை மரக்கரண்டியால் ஆன அதை பயன்படுத்துங்கள். வெதுப்பானதண்ணீர் மற்றும் டிஷ் சோப்பை பயன்படுத்தி ஸ்பாஞ்ச் மூலம் நன்கு சுத்தம் செய்யுங்கள்.
கருகிய உணவுகள், எண்ணெய் போன்றவற்றை ஒட்டிக் கொண்டிருந்தால் பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரை பயன்படுத்தி அதனை சேதமடைந்த பகுதியில் 15 நிமிடங்கள் சோப்பை தடவி அப்படியே விட்டுவிடவேண்டும். பின்னர் ஒரு காகிதத் துண்டை எண்ணெயில் ஊறவைத்து நாப்கின் மேற்பரப்பை துடைக்கவேண்டும். நான் ஸ்டிக் தவா குறைந்த அளவு வெப்ப சமையலுக்கு மட்டுமே உகந்தது. அதிக வெப்பத்தால் மேற்பூச்சு சேதமடைய வாய்ப்பு உள்ளது. சரியான வெப்பநிலை வைத்து இதனை பயன்படுத்தினால் நீண்ட காலம் நீடிக்கும்.
முக்கிய குறிப்பு தக்காளி மற்றும் எலுமிச்சை போன்ற அமில உணவுகளை சமைப்பது உங்களால் நான்ஸ்டிக் பவாவின் மேற்பூச்சு சேதம் ஏற்படும். உணவுகளை சமைக்கும் பாத்திரங்களை பயன்படுத்துங்கள். எல்லா நான்ஸ்டிக் தவாக்களையும் அடுப்பில் வைத்து பயன்படுத்த முடியாது. சில நான்ஸ்டிக் தவாக்கள் ரொட்டியை சுடுவதற்கு மட்டுமே பயன்படுகின்றன. பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தி உங்கள் நான்ஸ்டிக் பாத்திரங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.