Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை எப்படி சமாளிக்கிறது… நடைபெற்ற நூதன போராட்டம்… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து தொழிற்சங்க ஆட்டோ டிரைவர்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து கொண்டே வருவதால் ஏழை எளிய மக்கள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள், ஏழை எளிய மக்கள் ஆகியோர் இணைந்து பெட்ரோல் விலை 1  லிட்டருக்கு ரூ.100 – ஐ தொட்டதால் அதை கண்டித்து சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் நூதன முறையில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்திய அரசிடம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதன் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  வலியுறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Categories

Tech |