ஜெனீவாவில் நூதன முறையில் இளம் பெண்கள் திருட்டு செயல்களில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் இருக்கும் வெளிநாட்டு பணத்தை மாற்றும் அலுவலகத்திலிருந்து பெண் ஒருவர் வெளியே வந்துள்ளார். அப்போது வெளியே வந்த அவர் மீது எதிரே கையில் குளிர்பானங்களுடன் வந்த பெண் மோதியுள்ளார். அவர்கள் இருவரும் மோதியதில் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த பெண்ணின் ஆடையில் குளிர்பானம் சிந்தியது. உடனே குளிர்பானத்தை கொண்டு வந்த பெண் ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என்று கூறி அவரின் ஆடையை துடைத்துவிட்டுள்ளார்.
இதனையடுத்து இருவரும் அங்கிருந்து நகர்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து பையில் வைத்திருந்த காணவில்லை என்று அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். இதன் பின்னர் தான் அவருக்கு அந்த பெண் தன் மீது குளிர்பானத்தை சிந்தியதும் ஆடையை துடைத்துவிட்டதும் நினைவுக்கு வந்துள்ளது. மேலும் அந்தப் பெண் வேண்டும் என்று தான் தன் மீது குளிர்பானத்தை சிந்தி தன் கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடி சென்றுள்ளார் என்றும் புரிந்துள்ளது.
இதேபோன்று ஜெனீவாவில் உள்ள ரயில் நிலையத்தில் நாணய மாற்று அலுவலகத்திற்கு முன்பாக மற்றொரு பெண்ணும் ஆயிரக்கணக்கான சுவிஸ் ஃப்ராங்குகளை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ளும் போது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 20 வயதுக்குட்டப்பட இரு இளம் பெண்களை கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் நாணய மாற்று அலுவகத்தில் இருந்து வருபவர்கள் மீது குளிர்பானத்தை சிந்தி கவனத்தை திசை திருப்பி அவர்களிடம் இருந்து பணத்தை திருடி செல்வதாக கூறப்படுகிறது. மேலும் இளம் பெண்கள் இருவரும் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மக்கள் தங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு செல்லும்போது கவனமாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.