Categories
உலக செய்திகள்

நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாயில் ஏற்பட்ட கசிவு நின்றது… வெளியான தகவல்…!!!

நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாயில் கண்டறியப்பட்ட எரிவாயு கசிவானது, தற்போது நின்றுவிட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய நாட்டிலிருந்து ஜெர்மன் நாட்டிற்கு எரிவாயுவை எடுத்துச் செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் 1, நோர்ட் ஸ்ட்ரீம் 2 ஆகிய இரு குழாய்களிலும் நான்கு பகுதிகளில் கசிவுகள் இருப்பதை கண்டறிந்தனர். இந்த கசிவுகள் ரஷ்யாவால் திட்டமிட்டு செய்யப்பட்ட தாக்குதல் என்று ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டியது.

இந்நிலையில், நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாயினுடைய செய்தி தொடர்பாளராக இருக்கும், ulrich lisssek அந்த எரிவாயு பைப் லைனில் இருந்த கசிவு நின்று விட்டது என்று கூறியிருக்கிறார். பூஜ்ஜியம் செய்யப்பட்ட வாயு அளவாலும், கடல் நீரினுடைய அழுத்தத்தாலும் அது நின்று விட்டதாக கூறிய அவர், இனிமேல் வாயு வெளியாகாது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |