Categories
லைப் ஸ்டைல்

“சாதாரண தொண்டை வலி என்று எண்ணாதீர்கள்”… மருத்துவரை அணுகுவது நல்லது… பல பிரச்சினைகள் வரும்..!!

காய்ச்சல், சளி ,தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் வீட்டு வைத்தியம் போதும் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம் மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.

இதுபோன்ற அறிகுறிகள் டான்ஸில் நோய்க்கு அதிக வாய்ப்பாக உள்ளது. நாம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் இது பல பிரச்சனைகளை நமக்கு தரும். இதில் இரண்டு வகை உள்ளது.  திடீர் டான்சில் வீக்கம் மற்றும் நாட்பட்ட டான்சில் வீக்கம். திடீர் டான்சில் வீக்கத்திற்கு தலைவலி, சளி, காய்ச்சல், தொண்டை வலி, காது வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படும்.

இதில்  நாட்பட்ட டான்சில் வீக்கத்துக்கு சளி, காய்ச்சல் போன்றவை நிரந்தரமாகிவிடும். எடை குறைப்பு பசியிருக்காது மேலும் காது கேட்பதில் சிரமம் இருக்கும். இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆகையால் மருத்துவரை அணுக வேண்டும். இதுபோன்ற பாதிப்புகளை உண்டாகக்கூடிய நோய்கள் புறக்கணிக்காதீர்கள்.

Categories

Tech |