இனி வடகொரியா தாக்குதலில் ஈடுபட்டால் எங்களது பதிலடி மிகவும் மோசமானதாக இருக்கும் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது
சில தினங்களாக தென்கொரியாவை மிகவும் கடுமையாக வடகொரியா மிரட்டி வந்தது. 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இரண்டு நாடுகளுக்கும் பொதுவான தொடர்பு அலுவலகத்தை தகர்க்கப் போவதாகவும், இனி இரு நாட்டிடையே எந்த உறவும் இல்லை என்றும், எதிரி நாடாகவே பார்க்கப்படும் என்றும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இதனிடையே தென் கொரியா எல்லைமீறி நடந்து கொள்வதாகவும் இதனால் தங்கள் ராணுவத்தினரிடம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி இருப்பதாகவும் கிம் சகோதரி இரண்டு தினங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் நாட்டின் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த தொடர்பு அலுவலகம் தகர்க்கப்பட்டுள்ளது. இதனை வடகொரியா அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். பிறகு தென்கொரியா எல்லை பகுதியில் ராணுவ வீரர்களை குவித்துள்ளனர். அதோடு ரோந்து நடவடிக்கைகளும் ஆதிக படுத்தப்பட்டுள்ளது. தொடர்பு அலுவலகம் தாக்கப்பட்ட பிறகு தென்கொரியா ப்ளூ ஹவுஸ் மாளிகை மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் ஒன்றை மேற்கொண்டது. அதில் இனியும் பிராந்தியத்தில் அமைதியை கெடுக்கும் வகையில் வடகொரியாவின் செயல்கள் இருந்தால் அதற்கு தங்களது பதிலடி மிகவும் மோசமானதாக இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.