தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வளி மண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வழக்கத்தை விட அதிக அளவில் மழை பெய்கிறது. அதன் பிறகு கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கோடைகாலங்களில் கூட பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் அணைகள் மற்றும் நீர்நிலைகள் போன்றவைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டதோடு சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது.
இதனையடுத்து கடந்த வாரம் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக சிட்ரங் புயல் உருவானது. இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் ஒரு வாரமாக மழை பெய்து வருவதோடு, வங்காளதேசம், மேகலயா, அசாம் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. சிட்ரங் புயல் நேற்று இரவு கடையை கடந்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் வருகிற 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று அறிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக 29 மற்றும் 30-ம் தேதிகளில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.