அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தினுடைய சபாநாயகராக இருக்கும் நான்சி பெலோசி, உலக நாடுகளின் அமைதியை கெடுப்பவர் என்று வடகொரியாக கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறது.
அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தினுடைய சபாநாயகரா சமீபத்தில் மேற்கொண்ட ஆசிய பயணம் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அவர் தைவான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டதை சீனா கடுமையாக எதிர்த்தது. எனினும், அவர் அந்நாட்டிற்கு சென்று அதிபரை சந்தித்து பேசியிருக்கிறார்.
அதன் பின்பு வடகொரியா மற்றும் தென் கொரிய நாடுகளை பிரிக்கக்கூடிய கொரிய தீபகற்ப எல்லைக்கு சென்றிருக்கிறார். இதனை வடகொரியா கடுமையாக எதிர்த்திருக்கிறது. இது குறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, உலக நாடுகளின் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும், நான்சி பெலோசி கடுமையாக கெடுக்கிறார். அவரின் நடவடிக்கைகள் ஜோ பைடனின் அமெரிக்க அரசு, வடகொரிய நாட்டின் மீது எதிர்ப்புக் கொள்கை வைத்திருப்பதை காண்பிக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.