வடகொரிய அரசு, அமெரிக்க நாட்டை தாக்கும் பயிற்சியாகத் தான் ஏவுகணைகள் பரிசோதனைகள் என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் தென்கொரிய படைகளும் சேர்ந்து கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியை மேற்கொள்வதை வடகொரியா தொடர்ந்து எதிர்த்து வந்தது. அதற்காக அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனைகளை மேற்கொள்கிறது. கடந்த வாரத்தில் கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை வடகொரியா அனுப்பியது.
தென்கொரியாவை நோக்கி நூற்றுக்கும் அதிகமான போர் விமானங்களை செலுத்தியது. எனவே, கொரிய தீபகற்பம் பதற்றமடைந்துள்ளது. இது பற்றி வடகொரிய ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கோபத்தை ஏற்படுத்தும் வகையில் எதிரிகள் மேற்கொள்ளும் ராணுவ நகர்வுகள் எப்படி விடாமுயற்சியோடு தொடர்ந்து நடக்கிறதோ, அதே அளவிற்கு, எந்த இரக்கமும் இல்லாமல் வடகொரிய ராணுவம் அதற்கு பதிலடி கொடுக்கும் என்பதை நாங்கள் சமீபத்தில் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகள் குறிக்கிறது.
தற்போது நடக்கும் பயங்கர ஏவுகணை சோதனைகள் தென்கொரியா, அமெரிக்க நாடுகளின் முக்கிய தளங்களை இரக்கமில்லாமல் தாக்க மேற்கொள்ளப்படும் பயிற்சி தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.