Categories
உலக செய்திகள்

2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…. தொற்று கட்டுக்குள் இருப்பதாக கூறும் கிம் ஜாங் உன்…!!!

வடகொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் மேல் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உலக நாடுகளை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் வட கொரியாவில் கொரோனா தொற்று இல்லை என்று கூறிவந்த அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 12 ஆம் தேதி அன்று தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தினார். மேலும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தினார். எனினும் ஒவ்வொரு நாளும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று 2 லட்சத்து 20 ஆயிரம் நபர்கள் கொரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். எனினும், சுகாதார நிபுணர்கள் வடகொரியா உண்மையான கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை மறைத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.

இந்நிலையில் கிம் ஜாங் உன், நேற்று நடந்த ஆளும் கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டத்தில் பங்கேற்ற போது, கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |