Categories
உலக செய்திகள்

மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய வடகொரியா…. செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி சோதனை…!!!

வடகொரிய அரசு செயற்கைக்கோளை வானில் செலுத்தி, சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலினுடைய தீர்மானங்களை மீறி செயல்படுவதும், உலக நாடுகளின் எதிர்ப்புகளை கண்டு கொள்ளாமல் இருப்பதும் வடகொரியாவின் வழக்கமாகிவிட்டது. அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய இரண்டு ஏவுகணைகளை அடுத்தடுத்து ஒரே நாளில் வடகொரியா சோதனை மேற்கொண்டது.

அந்த ஏவுகணையானது, ஜப்பான் நாடு வரை பாய்ந்து தாக்கக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகொரியா முதல் உளவு செயற்கைக்கோளை வானில் செலுத்தக்கூடிய கடைசி பணியை மேற்கொண்டிருக்கிறது.

அந்த வகையில், மாதிரி செயற்கைக்கோளை வானில் செலுத்தி சோதித்திருக்கிறது. வெற்றிகரமாக அந்த சோதனை முடிந்தது என அந்நாட்டின் தேசிய விண்வெளி மேம்பாட்டு நிர்வாகமானது கூறியுள்ளது. மேலும், அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் உளவு செயற்கைக்கோளானது, வானில் செலுத்தப்பட்டு விடும் எனவும் கூறியிருக்கிறது.

Categories

Tech |