வடகொரிய நாட்டின் அதிபரான கிங் ஜாங் உன் தலைமையில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரிய கடற்படையினர் அமெரிக்க கடற்படையினரோடு சேர்ந்து கூட்டாக போர் பயிற்சி கொரிய எல்லைப் பகுதியில் போர் பயிற்சி மேற்கொள்வதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் தென்கொரியாவையும் அமெரிக்காவையும் அச்சுறுத்துவதற்காக 14 நாட்களாக தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் நேற்று தொடர்ந்து இரண்டு குறுகிய தூரத்திற்கு செல்லும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதனை செய்திருக்கிறது. அந்த ஏவுகணைகள் சுமார் 100 மீட்டர் உயரத்திற்கு சென்று 350 கிலோமீட்டர் தூரத்திற்கு பறந்திருக்கிறது. அதன் பிறகு கொரிய தீபகற்பம்-ஜப்பான் கடலின் இடையிலான பகுதியில் தண்ணீரில் விழுந்திருக்கிறது.
இரண்டு வாரங்களில் வடகொரியா ஏழாவது முறையாக ஏவுகணை சோதனையை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.