ஜப்பான் நாட்டின் கடல் எல்லைக்குள் பயங்கரமான ஆயுதத்துடன் வட கொரிய நாட்டை சேர்ந்த கப்பல் புகுந்துள்ளது.
ஜப்பான் நாட்டின் பொருளாதார மண்டலத்தினுள் வட கொரியாவை சேர்ந்த சோதனை கப்பல் பயங்கரமான ஆயுதத்துடன் புகுந்துள்ளது. அதனை ஜப்பான் கடலோர காவல்படையினர் கண்டறிந்துவிட்டனர்.
இது குறித்து ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்திருப்பதாவது, வட கொரியாவின் சோதனை கப்பல், மனிதர்கள் செயல்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் ஏவுகணை அமைப்புடன் வந்தது. மேலும், அந்த ஏவுகணை தரையிலிருந்து, வானத்தை நோக்கி பாயக்கூடியது என்று தெரிவித்திருக்கிறது.
அதாவது, இந்த ஏவுகணை அமைப்பானது, குறைவான உயரத்தில் பறக்கக்கூடிய விமானங்களை எளிதில் தாக்கும் திறன் கொண்டது. வட கொரியாவின் கப்பல் முதல் தடவையாக, ஜப்பான் நாட்டின் கடலில் MANPADS-வுடன் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு, ஜப்பான் அரசு, நாட்டின் மீன்பிடி கப்பல்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.