Categories
உலக செய்திகள்

இங்க ஒருத்தருக்கு கூட கொரோனா இல்ல..! அறிக்கை சமர்ப்பித்த பிரபல நாடு… உலக சுகாதார அமைப்பு தகவல்..!!

உலக சுகாதார அமைப்பிடம் வட கொரியா தங்கள் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு ஒருவருக்கு கூட உறுதி செய்யப்படவில்லை என்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட கொரியாவின் தலைவரான கிம் ஜாங் உன் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடை ஆகியவற்றின் காரணமாக அந்நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா கடந்த 10-ஆம் தேதி வரை தங்கள் நாட்டில் கொரோனா பரிசோதனை 30 ஆயிரம் பேருக்கு மேற்கொள்ளப்பட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஒருவருக்கு கூட உறுதியாகவில்லை என்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

Categories

Tech |