வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் அந்நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொருளாதார தடை மற்றும் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் வடகொரியாவில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகள் உள்ளிட்ட நெருக்கடி காரணமாக உணவுத் தட்டுப்பாடு வடகொரியாவில் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளார்.