வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தென்கொரியாவின் ராணுவக் கட்டமைப்பு மற்றும் அமெரிக்காவின் விரோத கொள்கைகளை எதிர்கொள்ளவே தங்கள் நாட்டிற்கு ஆயுத வளர்ச்சி தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.
வடகொரியா தங்கள் நாட்டை பாதுகாத்து கொள்வதற்காக மட்டுமே ராணுவ கட்டமைப்பை அதிகரித்துள்ளது என்று ஜனாதிபதி கிம் ஜாங் உன் கூறியுள்ளார். அதேசமயம் போர் தொடங்குவது குறித்து எந்த விவாதமும் முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் தேசிய இறையாண்மையை பாதுகாப்பது மற்றும் போரை தடுப்பது உள்ளிட்டவை குறித்து விவாதித்து வருவதாக கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.
இதற்கிடையே அமெரிக்கா, விரோத உணர்வெல்லாம் வடகொரியா மீது இல்லை என்று கூறி வருவதை நம்புவது கடினம். இந்த நிலையில் கொரிய தீபகற்பத்தில் ராணுவ கூட்டமைப்பை பலப்படுத்துவதற்காக தென்கொரியா மேற்கொள்ளும் ஆபத்தான மற்றும் கட்டுப்பாடற்ற முயற்சிகள் இராணுவ சமநிலையை அழித்து ஆபத்தான மற்றும் ராணுவ உறுதியற்ற தன்மையை அதிகரிக்கிறது என்று கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.