Categories
உலக செய்திகள்

120 நாய்களை வைத்து… “தனது சொந்த மாமாவை நிர்வாணமாக்கி”… கடித்து குதறி கொல்ல செய்து ரசித்த கிம்… பலரும் அறியாத அதிர்ச்சி!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது சொந்த மாமாவை நிர்வாணமாக்கி 120 நாய்களை வைத்து கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகவும், மரணப்படுக்கையில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் கடந்த சில நாட்களாக உலா வந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்று தென்கொரிய அதிகாரி நேற்று உறுதி செய்துள்ளார்.

அதிபர் கிம் சாதாரண ஆளே கிடையாது. சர்வாதிகாரியாக அறியப்படும் கிம் தனக்கு எதிராக செயல்பட்டவர்களை  எல்லாம் கொடூரமாக தண்டிக்கும் குணம் கொண்டவராக இருந்துள்ளார். அது யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு தண்டனை கொடூரமாகத் தான் இருக்கும் என்பதை அவருடைய மாமாவின் மரணம் புரிய வைத்துள்ளது..

ஆம், தனது சொந்த மாமாவை கடந்த 2013 ஆம் ஆண்டு கிம் கொடூரமாக கொன்றது குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. கிம் ஜாங் உன் மாமா ஜாங் சாங் தேக். 67 வயதான இவர் அந்நாட்டு அரசியல் தலைவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் அதிகாரம் மிக்கவராக செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கிம்முக்கு எதிராக செயல்பட்ட அவரது மாமா உயிரை இழக்க நேரிட்டது. அதாவது, ராணுவப் புரட்சி மூலம் அதிபர் கிம் ஜாங்   உன்னிடமிருந்து ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று சதி திட்டம் தீட்டியுள்ளார் அவரது மாமா. இதை அறிந்து கொண்ட கிம் ஜாங் அவரையும் அவரது உதவியாளர்கள் 5 பேரையும் கைது செய்தார். பின்னர் அந்த 5 பேருக்கும் மரண தண்டனை அளிப்பதாக அவரது அரசு உத்தரவிட்டது.. அதுவும் சாதாரணமாக அவர்கள் கொல்லப்படவில்லை, மிகவும் கொடூரமான முறையில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதாவது, 120 நாய்களை 3 நாட்களுக்கு உணவு ஏதும் கொடுக்காமல் பட்டினி போட்டு வைத்துள்ளார்கள். அதன்பிறகு ஜாங் சாங் தேக் மற்றும் அவரது உதவியாளர்களின் ஆடைகள் ஒன்றும் இல்லாமல் கலைந்து அந்த நாய்களிடம் விடப்பட்டதாகவும், அந்த 120 நாய்களும்  ஒன்று சேர்ந்து 5 பேரையும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடித்துக் குதறி கொன்றதை அதிபர் கிம் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் அமர்ந்து நேரடியாக பார்த்து ரசித்துள்ளார்.

இந்த செய்தியை அப்போது straits times என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இது அந்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் உலகளவில் ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லை, இதே போல ஏற்கனவே தனது தன்னுடைய முன்னாள் காதலி ஆபாச படத்தில் தோன்றியதாக கூறி அவருக்கும் கிம் ஜாங் உத்தரவின் பேரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |