வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்து விட்டதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் தென்னாப்பிரிக்க பிரதமருக்கு தனது கைப்பட கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என்றும், அவர் மரணப்படுக்கையில் உயிருக்கு போராடுகிறார் என்றும் பல்வேறு செய்திகள் உலக நாடுகள் மத்தியில் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஹாங்காங்கின் தொலைக் காட்சி இயக்குனர் அவர் மரணித்து விட்டார் என்று தெரிவித்தார். ஆனால் அவர் சாகவில்லை, நலமுடன் தான் இருக்கிறார் என்று அந்நாட்டை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார்.. ஆனாலும் உலக நாடுகளுக்கு ஒரு சந்தேகம் நிலவி கொண்டே இருக்கிறது.
இந்த சூழலில்தான் அதிபர் கிம் ஜாங் உன் தென்னாபிரிக்க அதிபர் சிறில் ரமபோசாவுக்கு (Cyril Ramaphosa) தன் கைப்பட கடிதம் எழுதியுள்ளதாக வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனமான KCNA செய்தி வெளியிட்டுள்ளது.. அந்தக் கடிதத்தில், தென்னாப்பிரிக்காவின் சுதந்திர தினத்திற்கு சிறில் ரமபோசாவுக்கு கிம் ஜாங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் இரு நாடுகளின் பிணைப்பு வலுவாக வளர்ந்து வருவதாக அவர் கடிதத்தில் எழுதியுள்ளார் என கூறப்பட்டுள்ளது.. அதிபர் கிம் உயிருடன்தான் இருக்கிறார் என்பதை உலகுக்கு உணர்த்தவே இந்த தகவலை KCNA வெளியிட்டுள்ளதாக கருதப்படுகிறது.