Categories
உலக செய்திகள்

“நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே சரிந்த அதிபர் கிம்”… கை நடுக்கத்தால் தவறு செய்த மருத்துவர்கள்… வடகொரியாவுக்கு விரைந்த சீனா!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே சரிந்ததாகவும், மருத்துவர்கள் கை நடுக்கத்தால் அவருக்கு இதய அறுவை சிகிச்சை தவறாக சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது என்வென்றால் வடகொரிய அதிபர் உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்று தான். அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என்றும், அவர் மரணப் படுக்கையில் உயிருக்கு போராடுகிறார் என்றும் பல்வேறு மாறுபட்ட தகவல்கள் வெளியாகிக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அவர் உடல் நலக்கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது ஏப்ரல் மாத தொடக்கத்தில் அதிபர் கிம் ஜாங் நாட்டுக்குள் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென  நெஞ்சு வலி ஏற்பட்டு, கையால் மார்பை பிடித்துக்கொண்டு  கீழே சரிந்து விழுந்தார்.

அதைத் தொடர்ந்து அவர் வடகொரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது மருத்துவர்கள் இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்பட்டிருக்கும்  அடைப்பை திறக்க வைக்கப்படும் stent எனப்படும் சிறுகுழல் கருவியை பொருத்தி உள்ளனர். அந்த சமயத்தில் சற்று பயத்துடன் மருத்துவர்களின்  கைகள் நடுங்கியதால் தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டது என கூறப்படுகின்றது.

அதிக புகைப்பழக்கம், உடல் பருமன் மற்றும் குடும்பத்தாருக்கு இருந்த இதய நோய்கள் ஆகியவை தான் கிம்மின் உடல்நிலை மிகவும் மோசமாக  காரணம் என தெரியவந்துள்ளது. இதனிடையே சீன மருத்துவர்கள் வடகொரியாவுக்கு விரைந்து சென்று அதிபருக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் எனும் ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளது.. அதிபர் கிம்மின் தந்தை கடந்த 2011 ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |