வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் பொருளாதரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தியுள்ளார்.
வடகொரியா நாடு கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து, உலகிலுள்ள பிற நாடுகளுடனான உறவை கைவிட்டது. மேலும் பிற நாடுகளிலிருந்து, தங்கள் நாட்டிற்கு வரும் சரக்கு கப்பல்களும் ரத்து செய்யப்பட்டது. எனவே வட கொரியாவில் பொருளாதாரம் கடுமையாக பாதித்தது.
மேலும் அமெரிக்காவால், வடகொரியாவிற்கு பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை மேற்கொண்ட வடகொரியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. எனவே நாட்டு மக்களின் நிலையும் பரிதாபமானது.
இதனால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து அதிபர் கிம் ஜாங் உன் அதிபர்களிடம் இன்று ஆலோசனை நடத்தியிருக்கிறார். இதில் அதிபர், மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், நாட்டினுடைய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் உரிய திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு அளித்துள்ளார்.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டமானது, சிறிய அளவில் நடைபெற்றது. எனவே இந்த வாரத்தின் கடைசிக்குள் பெரிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.