சீன நாட்டுடனான எல்லைக்கு அருகே கட்டப்படும் புதிய நகரை வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டிருக்கிறார்.
வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் கடந்த மாதம் அந்நாட்டின் ராணுவ கண்காட்சியில் பங்கேற்றார். அதன்பின்பு அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். எனவே அவரின் உடல் நிலை தொடர்பில் சந்தேகங்கள் எழுந்தது.
அதன்பின்பு, அவர் அலுவலக பணிகளால் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்றும், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அவரின் தந்தை மற்றும் நாட்டின் முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல்லின் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், கிங் ஜாங் உன், 35 நாட்கள் கழித்து சீன நாட்டுடன் எல்லைக்கு அருகே கட்டப்படும் புதிய நகரை பார்வையிட்டிருக்கிறார். கிம் குடும்பத்தினரால் போற்றப்படக்கூடிய மவுண்ட் பெக்டு என்ற புனித மலைக்கு அருகே தான் இந்நகர் இருக்கிறது.