தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நாளை முதல் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.
இதனையடுத்து நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அநேக இடங்களிலும், தென்காசி, தேனி, தூத்துக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ள மாவட்டங்களில் அநேக இடங்களிலும் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
இதைத்தொடர்ந்து 30-ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அநேக இடங்களிலும், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
வருகிற 31-ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அநேக இடங்களிலும், குமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் வேலூர் உள்ள மாவட்டங்களில் லேசானது முதல் கன மழை பெய்யும்.
நவம்பர் 1-ம் தேதி தமிழகம் புதுவை காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அநேக இடங்களிலும், திண்டுக்கல், தேனி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் சென்னையில் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் ஓரிரு இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.