தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதோடு சில இடங்களில் கன மழை பெய்வதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன் பிறகு தமிழகத்தில் பருவமழை தொடர்பான அனைத்து விதமான முன்னேற்றத்தை நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி சென்னை வாசிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கிறது.
இதனை எடுத்து தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இங்கு வினாடிக்கு 1150 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், ஒரே நாளில் நீர்மட்டமானது 90 மில்லியன் உயர்ந்து தற்போது 2765 மில்லியனாக இருக்கிறது. இதேபோன்று புழல் ஏரிக்கும் மழையின் காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இங்கு வினாடிக்கு 1197 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் சோழவரம் ஏரியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் தற்போது 214 கன அடியாக இருக்கிறது.