Categories
மாநில செய்திகள் விருதுநகர்

தமிழகத்தை ஆக்கிரமித்த வடமாநிலத்தவர்கள்….. கொலை…கொள்ளை…கற்பழிப்பு… தொடரும் குற்ற சம்பவம்… அதிர்ச்சி தகவலால் பரபரப்பு நடவடிக்கை….!!

விருதுநகரில் நடந்த குற்ற சம்பவங்களில் பெரும்பான்மையான பங்கு வடமாநிலத்தவர்களுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தற்போது வரை நடைபெற்ற கொலை கொள்ளை கற்பழிப்பு உள்ளிட்ட அனைத்து குற்ற சம்பவங்களிளும் பெரும்பான்மையாக வட மாநிலத்தவர்களின் பங்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உதாரணமாக சமீபத்தில் சிவகாசி அருகே 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கிலும் அசாம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் கைது செய்யப்பட்டார்.

இந்த குற்ற  செயலில் ஈடுபட்ட மேலும் 5 பேர் அவர்களது சொந்த மாநிலத்திற்கு தப்பி ஓடியதால் அவர்களை பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் வங்கி ஒன்றில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்களும் சொந்த மாநிலத்திற்கு தப்பியோடியதால் அவர்களையும் பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும் பட்சம் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் இணைந்து புதிய நடவடிக்கை ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதன்படி தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள் தங்களது முழு விவரத்தை அருகில் உள்ள காவல்நிலையத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.

ஆனால் இதனை ஒரு மாதம் சரியாக பின்பற்றிய மாவட்ட காவல் நிர்வாகம் தனியார் நிறுவனங்கள் சரியான ஒத்துழைப்பு அளிக்காததனால் அதனை அப்படியே கைவிட மீண்டும் குற்ற சம்பவங்கள் தொடர்ந்தது.  இந்நிலையில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு இதனை மீண்டும் கட்டாயமாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாநில உளவுத் துறை சார்பிலும் தமிழகமெங்கும் உள்ள வடமாநிலத்தவர்கள் முழு விவரங்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சிறு குறு வணிக நிறுவனங்கள் முதல் மிகப்பெரிய தொழிற்சாலை வரை அனைத்திலும் வடமாநிலத்தவர்கள் ஆக்கிரமித்து இருப்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |