சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள 510 பணிகளுக்கு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிய சமீபகாலமாக வடமாநிலத்தவர்கள் அதிகமாக தேர்வு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வந்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) காலியாக உள்ள 510 பணியிடங்களுக்கு அப்ரண்டீஸ் வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக வேலைவாய்ப்புகளில் தமிழர்கள்தான் இனி விண்ணப்பிக்க முடியும். வடமாநிலத்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது என்பது உறுதியாகி உள்ளது.