வடமாநில தொழிலாளி கோவை விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேட்டில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் விமான நிலைய வளாகத்தின் பின்புறம் பகுதியில் ஓடுதளத்தை ஒட்டி உள்ள சுவரை தாண்டி உள்ளே குதித்துள்ளார். இதனையடுத்து அந்த நபரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரித்ததில், அவர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் வசித்து வரும் முகமது சதாம் என்பதும், அவர் ஒரு பேக்கரியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த நபர் தான் இயற்கை உபாதை கழிக்க வந்ததாகவும், தண்ணீர் தேடி விமான நிலையத்திற்குள் தெரியாமல் புகுந்து விட்டதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் பீலமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட முகமது சதாமின் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.