கைகள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேளகொண்டபள்ளி பகுதியில் இருக்கும் மின்வாரிய அலுவலகம் அருகில் துர்நாற்றம் வீசியதால் அவ்வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் மத்திகிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகத்தில் உள்ளனர். மேலும் அப்பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் பலர் வேலை பார்த்து வருவதால் அங்கு வசிக்கும் ஒரு பெண் தான் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.